பாஜகவினரை சீண்டினால் தொலைத்துவிடுவேன்! காவல் அதிகாரியை பகிரங்கமாக மிரட்டிய மத்திய அமைச்சர்! வைரல் வீடியோ!

மத்திய அமைச்சரான அஸ்வினி குமார் செளபே, பாஜக தொண்டருக்கு ஆதரவாக, காவல்துறை அதிகாரிரை மீரட்டிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜக மத்திய அமைச்சர்.


பீகார் மாநிலத்தில் உள்ள பக்ஸரில் (buxar) தொகுதியின், எம்.பி.யும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையை சார்ந்த மத்திய அமைச்சருமான அஸ்வினி குமார் செளபே (aswini kumar choubey) அவர்களின் தொகுதியில் ”ஜனதா தர்பார்” எனும் பெயரில் பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அமைச்சர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தொகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

”ஜனதா தர்பார்” குறைகேட்கும் நிகழ்ச்சியில் மக்கள் தனது குறைகளை சொல்லி கொண்டு இருக்கும் வேலையில், பொது மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் இருந்த பாஜகவை சேர்ந்த நபர் ஒருவர், மத்திய அமைச்சரிடம் காவல்துறையினர் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அதனைக் கேட்ட மத்திய அமைச்சர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை அழைத்து அவரை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

பாஜகவினரிடம் வால் ஆட்டினால் தொலைவத்துவிடுவேன் என்று காவல் அதிகாரியை மிரட்டும் காட்சிகள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வெளியாகி பாஜக மத்திய அமைச்சருக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வினை அடுத்து மத்திய மைச்சர் அஸ்வினி செளபே அவர்கள் செய்தியாளர்களிடம் வீடியோ காட்சிகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாவது, பேட்டியில் மத்திய அமைச்சர் செளபே அவர்கள், பீகாரில் கடந்த2003ஆம் ஆண்டில், ஊழல், குற்றங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜகவினரும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தற்போதைய நிர்வாகத்தால் ரவுடிகளாக (gundas) அழைக்கப்படுவதாக தெரிவித்தார். பின்னர் காவல் அதிகாரியை அழைத்து யாரையும் ரவுடியென அழைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.