ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கன்ஃபார்ம்! இலாகா என்ன தெரியுமா?

துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராக ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரவீந்திரநாத் குமார். இவர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு மகன். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்த நிலையில் தேனியில் மட்டுமே அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. எனவே அந்தக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க மோடி உறுதியாக உள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக மட்டுமே எம்பிக்கள் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியாகும். எனவே அந்தக் கட்சியில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இணை அமைச்சர் பதவி என்றால் இரண்டு பேருக்கும் கேபினட் அந்தஸ்து என்றால் ஒருவருக்கும் என்று முடிவாகி உள்ளது. மகனைத் தவிர அமைச்சராக ஓபிஎஸ் முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் இணை அமைச்சர் பதவி அவருக்கு உறுதியாகியுள்ளது.

அப்படியே இணை அமைச்சர் பதவிதான் என்று ஆகிவிட்டால் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை வழங்கவேண்டும் என்று ஓபிஎஸ் லாபி செய்து வருகிறார். ஏனென்றால் தமிழகத்தில் வீட்டு வசதி துறையை தன்வசம் வைத்துள்ள ஓபிஎஸ் மத்தியிலும் அதே துறையை கொண்டுள்ள நகர்ப்புற வளர்ச்சித் துறை தனது மகனுக்கு கிடைத்தாள் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார். எனவே நகர்ப்புற வளர்ச்சித் துறை தனது மகனுக்கு வழங்குமாறு ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார். இணை அமைச்சர் பதவி என்பதால் அந்த இலாகாவை ஓபிஎஸ் மகனுக்கு கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்கிறார்கள்.