புலம்பெயர் தொழிலார்கள் மீது கரிசனம் காட்டிய மத்திய அமைச்சர்

இந்தியாவில் கொரோனாவுக்கு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூடத்தனத்தை உலகிற்கு காட்டும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் ஊர் நோக்கு நடந்துசெல்லத் தொடங்கியிருக்கின்றனர்.


ஆனால், அவர்களை பத்திரமாக ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டிய மத்திய அரசு பாராமுகம் காட்டி வருகிறது. ரயில் அனுப்புகிறோம் என்று சொல்லி வசூல் வேட்டையில் இறங்கினார்கள். அதன்பிறகு மத்திய அரசு 85% டிக்கெட் கட்டணத்தை செலுத்தும் என்றார்கள், ஆனால், எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. ஆகவே, நடந்தே செல்பவர்கள் இன்னமும் நடந்துதான் செல்கிறார்கள்.

இவர்களுக்கு வாகனம் ஏற்பாடு தரவேண்டிய மத்திய அமைச்சர் ஒருவர் இதுகுறித்து என்ன சொல்கிறார் தெரியுமா..? ‘மக்கள் அனைவரும் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என எண்ணுகின்றனர். இப்போது ஒரு ஊருக்கு செல்லும் ரயிலுக்காக, பத்து ஊருக்கு செல்ல வேண்டிய மக்கள் கூடுகின்றனர். எனவே அடுத்த ரயில் வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், பொறுமையில்லாத சில தொழிலாளர்கள் சாலைகளில் நடந்தும், சைக்கிளிலும் ஊருக்கு கிளம்பியுள்ளனர்.'' 

இப்படி கூறியிருப்பவர், மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர். என்ன செய்வது வலியும், வேதனையும் அரசுகளுக்கு ஒருபோதும் புரிவதே இல்லை.