மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணன் தானம் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரரின் உடலுடன் செல்ஃபி எடுத்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் முன்பு மத்திய அமைச்சர் செய்த கேவலமான செயல்!

அண்மையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். பேருந்தின் மீது தற்கொலைப் படைத் தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரம்பிய காருடன் மோதியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் லக்கிடியைச் சேர்ந்த வீரர் விஜயகுமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணன் தானமும் அஞ்சலி செலுத்தச் சென்றார். அவர் அங்கு சென்று செய்த செயலை விட செல்லாமல் இருந்திருந்தாலே சர்ச்சையில் சிக்கியிருக்க மாட்டார். விஜயகுமார் உடலுக்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.
அந் நிலையில், அந்தப் பின்னணியில் செல்ஃபி எடுத்த அவர், அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். அதில் "இவரைப் போன்றவர்களால் தான் நானும் நீங்களும் அமைதியாக வாழ்கிறோம்" என ஒரு பதிவு வேறு.
சாவு வீட்டிலும் விளம்பரம் தேடிக்கொள்ள முற்படுவதுதான் அரசியல்வியாதியின் பிழைப்பு என்ற ரீதியில் அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கண்டனக் கணைகள் துளைத்துக்கொண்டிருக்கின்றன.
துயரமான ஒரு நேரத்தில் செல்ஃபி எடுத்து சமூகவலைதளத்தில் வேறுவெளியிட்டது பொறுப்பான அமைச்சர் பதவியில் இருப்பவரின் பொறுப்பற்ற தனம் என சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இன்னும் தரமான கேமராவில் படம் எடுத்திருந்தால், அதில் உங்கள் வெட்கம்கெட்ட தனம் தெளிவாக தெரிந்திருக்கும் என்றும், இந்தப் படம் கண்ணன்தானத்தின் சுயநலத்துக்கு எடுத்துக்காட்டு என்றும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.