எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசில் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்பதற்கு உதாரணமாக இன்று ஒரு சர்டிஃபிகேட் வழங்கப்பட்டு உள்ளது.
எடப்பாடிதான் இந்தியாவின் தலை சிறந்த நம்பர் ஒன் நிர்வாகியாம்! மத்திய அரசே சொல்லியாச்சு!

ஆம், பல்வேறு துறைகளின் செயல்பாடு அடிப்படையில் நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்திய நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 18 பெரிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் பொருளாதார நிர்வாகத்தில் தமிழகத்துக்கு 5வதுஇடம் கிடைத்துள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு 99 விருதுகள் பெற்று முன்னணியில் உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்றும் சில விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
அதிக விருதுகள் பெற்ற மாநிலங்கள் என்ற பட்டியலிலும் தமிழகத்துக்கு விருது கிடைக்குமோ? எப்படியோ எடப்பாடி பழனிசாமி பரிசு வாங்கினா தமிழனுக்குப் பெருமைதான்.