கொரோனா பரவலை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் N95 முக்கவசங்கள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என்று இத்தனை மாதங்கள் கழித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அச்சச்சோ N95 முக்கவசங்கள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துமாம்

சரியான முகக் கவசம் அணியாவிட்டால் கொரோனா பாதிப்பு உண்டாகும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின், சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் ராஜூவ் கர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்.95 போன்ற சுவாச வால்வுகள் பொருத்தப்பட்ட மாஸ்க் அணிவதால், வைரஸ் எளிதில் வெளியேறும் என்றும், அதனால் கிருமியை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். அதனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாதாரண துணி மாஸ்க் பயன்படுத்தினாலே போதும் என்று ராஜூவ் கர்க் தெரிவித்துள்ளார்.
நமது சுகாதாரத் துறை எத்தனை வேகமாக செயல்படுகிறது என்று வருத்தப்படுவதா அல்லது இப்போதாவது சொன்னார்களே என்று சந்தோஷப்படுவதா என்றே தெரியவில்லையேப்பா.