வயதுக்கு வந்த பெண்களுக்கான சமாச்சாரம் இது! ஆண்களும் கூட தெரிந்து கொள்ளலாம்!

மத்திய அரசு மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் விற்பனை செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அதனடிப்படையில் இளம்பெண்கள் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் 1 ரூபாய்க்கு 1 நாப்கின் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பாஜக அரசு நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு 1 ரூபாய்க்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது.இந்நிலையில் அதை நிறைவேற்றும் விதமாக நாடு முழுவதிலும் உள்ள ஜன ஆஷாதி கேந்திரங்கள் மூலம் 1 ரூபாய்க்கு நாப்கின் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

தற்போதும் சந்தையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் சானிட்டரி நாப்கின்கள் 1 நாப்கின் 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையாகிறது இந்நிலையில் மிகவும் ஏழ்மையான பாமர மக்கள் அதனை வாங்கி பயன்படுத்த முடியாமல் சுகாதாரமற்ற துணிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நாப்கின் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  

இந்நிலையில் இந்த திட்டமானது பொது மக்களிடையே அதிக வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திட்டமானது கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் மற்றும் இளம் பெண்கள் பயனடைந்துள்ளனர். மற்றும் பொது இடங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டன. அரசு பள்ளிகளில் மாணவியர்களுக்கு இது வாசமாக அரசு சார்பில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி பெண்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.