ஒரே நாடு! ஒரே ரேசன் கார்டு! தமிழனை மொட்டை அடிக்க மோடி போடும் பலே பிளான்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

திடீரென மோடி, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்தும் திட்டம் கொண்டு வந்திருக்கிறார் என்றால், இதற்குக் காரணம் தமிழகம், கேரளம், கர்நாடகத்தில் சிறப்பாக இயங்கிவரும் ரேஷன் கடைகளை அடித்து நொறுக்குவதுதானாம்.


கடந்த பத்தாண்டுகளில் வட மாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளிகளாக இந்த மூன்று  மாநிலங்களில் குடியேறியவர்கள் ,குறைந்தது ஒரு கோடி முதல் இரண்டு கோடி இருக்கும்.

இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுவது இந்த மாநிலங்களில்தான். அதுவும் தமிழகத்தில் இலவச அரிசி,பொங்கல் பரிசு என்று பல்வேறு நலத்திட்டங்கள் உண்டு.

இந்த ஒரே நாடு,ஒரே கார்டு திட்டத்தால் இந்த இரண்டு மாநிலங்களில் இப்போது இருப்பதை விட 25% புதிய கார்டுகள் அதிகரிக்கும்.மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை கூடும். இந்தியாவில் எல்லா கடைகளிலும் இந்தக் கார்டுகள் செல்லும் என்பதால் இனி இந்த மூன்று மாநில ரேஷன் கடைகளிலும் தினமும் பற்றாக்குறையும் பதற்றமும் நீடிக்கும்.

தமிழர்களின் தாயகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்கவேண்டுமென்றால் இது போன்ற நாசகாரத் திட்டங்களை நாம் எதிர்க்கவேண்டும். நமது தாயகத்தில் மற்றவர்கள் நுழையக்கூடாது இதற்கு அர்த்தமில்லை. ஆனால் யார் நுழையலாம், எவ்வளவு பேர் நுழையலாம் என்பதை நாம் தீர்மானிக்கும் நிலை இருக்குமானால் அது வேறாகும். கட்டுப்பாடற்ற குடியேற்றம் என்பது இயல்பு மீறியது.

இது புது தில்லி திட்டமிட்டிருக்கும் தாயக அழிப்புக்கொள்கை. எல்லா ஏகாதிபத்தியங்களும் பல சமயங்களில் இப்படித்தான் திட்டமிட்டிருக்கின்றன. இன்றும் இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இவை அனைத்துமே திட்டமிட்ட இன அழிப்புக்கான செயல்பாடுகளாகும்.

தயவுசெய்து யாரும் சர்வதேசியவாதத்தையும் பரந்த மனப்பான்மையையும் தூக்கிக்கொண்டு இங்கே வராதீர்கள். அது ஏற்கனவே எங்களிடம் எக்கச்சக்கமாக இருக்கிறது!

மோடி அரசு திட்டமிட்டிருக்கும், கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறையிலிருக்கும் "இந்திக்காரர்களை இந்தி பேசாத மாநிலங்களில் குடிபெயரவைக்கும் திட்டம்" என்பது திட்டமிட்ட சதியாகும். குஜராத் மாநிலம் கூட ஏற்றுக்கொள்ள மறுத்து அங்கே இந்திக்கார்களுக்கு எதிராக பிரச்சினை வெடித்ததை மறந்துவிடவேண்டாம்.

மாநிலங்களின் அனுமதியோடு குடிபெயரும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவது அந்தந்த மாநிலங்களின் கடமையாகும். புலம்பெயரும் தொழிலாளர்களின் நலனைக் காப்பது என்பதில் எந்த சமரசமும் இல்லை. புலம் பெயரும் தொழிலாளர்களைச் சுரண்டும் உள்ளூர் கொள்ளைக்காரர்களை நாம் எதிர்க்கிறோம். புலம்பெயர்தலின் வலியை தமிழர்களை விட வேறு யாரால் அதிகம் உணரமுடியும்?

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாக இதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கர்நாடகம் கொஞ்சம் விழித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்பியான தேஜஸ்வி சூர்யா கூட கர்நாடகத்திலுள்ள வங்கிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று பேசினார். கர்நாடகத்தில் இந்தி பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் வெளிப்பாடகவே சில ஆண்டுகளாக அங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்துவருகிறது.

பார்ப்பன அரசியல் - சமூக ஆதிக்கம், பனியா பொருளாதார ஆதிக்கம், அதற்கு அடித்தளமாக இந்தி பேரினவாத ஆதிக்கம் - இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் வியூகம். இதை நாம் பார்க்க மறந்துவிடக்கூடாது. திட்டமிடப்பட்ட, அரசியல் நோக்கத்திலான புலப்பெயர்ச்சிகளை ஏற்றுக்கொண்டால் இலங்கையிலும் பாலஸ்தீனத்திலும் நடந்தது எல்லாம் இங்கும் நடக்கும் என்பதை மறக்காதீர்கள்.

இந்த நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் உரக்க குரல் கொடுத்திருப்பார், ஆனால், இருப்பதோ அடிமை எடப்பாடி. இவரிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?