மனைவிக்கு போனில் செக்ஸ் டார்ச்சர்! பெண் குரலில் பேசி வரவழைத்த கணவன்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

செல்போனில் பெண் ஒருவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த மர்ம நபரை அவரது கணவர் பெண் குரலில் பேசி வரவழைத்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்து உள்ளார்.


நாகர்கோவிலில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து செல்போனில் மர்ம நபர்கள் ஒருவனிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்துள்ளது. செல்போனை அந்தப் பெண் எடுத்ததும் ஆபாசமாக அந்த நபர் பேசியுள்ளார். எத்தனையோ முறை கூறியும் அந்த நபர் கேட்பதாக இல்லை. அழைப்பு வரும்போது இணைப்பை துண்டித்தால் வேறு வேறு நம்பர்கள் இருந்து வந்து தொடர்ந்து செக்ஸ் டார்ச்சரை தொடர்ந்துள்ளான்.

எப்போது என்னுடன் படுக்க வருகிறாய் நான் எங்கு வரவேண்டும் உன்னுடைய கணவன் என்ன செய்கிறான் என்றெல்லாம் மிகவும் ஆபாசமாக அந்த மர்ம நபர் பேச பயந்து போன அந்தப் பெண்மணி தனது கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பிறகு அந்த மர்ம நபர் தொலைபேசியில் பேசும்போது கணவன் எடுத்துள்ளார். ஆண் குரல் கேட்டதும் உடனடியாக இணைப்பை அந்த மர்ம நபர் துண்டித்துள்ளார்.

இதனால் மறுபடியும் அந்த நபர் செல்போனில் தொடர்புகொண்ட போது பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கணவன் பெண் குரலில் பேசியுள்ளார். மேலும் தங்களின் ஆசைக்கு உடன் படுவதாகவும் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு கூறி முகவரியை கொடுத்துள்ளார் கணவன். தன்னிடம் பேசியது தான் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்த பெண்ணின் கணவன் என்று தெரியாமல் நேரில் சென்று அந்த இளைஞன்.

வீட்டுப் பக்கம் அந்த இளைஞன் வந்ததும் தன்னுடைய நண்பர்கள் மூலமாக சுற்றி வளைத்துப் பிடித்த கணவன் தர்ம அடி கொடுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்தார். பிறகு போலீசுக்கு தகவல் அளித்து ஒப்படைத்தனர். விசாரணையில் செல்போனில் டார்ச்சர் கொடுத்த நபர் கோட்டாறு ராம்பிரபு என்பது தெரியவந்துள்ளது.

அந்த நபர் மீது ஏற்கனவே இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.