ரயிலில் தகாத செயல்! ஆண் ஊழியரை புரட்டி எடுத்த பெண்! வைரல் வீடியோ!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு பெண் தனது செல்ஃபோனை திருடிய ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் ஊழியரை சரமாரியாகத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.


டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக சென்ற நந்தினி பெலேகர் என்ற பெண், கவுன்ட்டர் அருகில் தனது செல்ஃபோனை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து தன்னிடம் செல்ஃபோன் இல்லாததை உணர்ந்த அவர், டிக்கெட் கவுன்ட்டர் ஊழியரான மனோஜ் ஜெய்ஸ் வாலிடம் தான் செல்ஃபோனை விட்டு சென்றுவிட்டதாகக் கேட்டார். 

ஆனால் தான் செல்ஃபோன் எதையும் பார்க்கவில்லை என மனோஜ் கூறிய நிலையில் நந்தினிக்கு மனோஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து டிக்கெட் கவுண்ட்டர் அறைக்குள் நுழைந்த அவர், மனோஜின் சட்டைப் பையில் வலுக்கட்டாயமாக சோதனையிட்ட போது அவரது செல்ஃபோன் இருந்ததும், அதில் இருந்த சிம்கார்டு நீக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த நந்தினி, மனோஜை சரமாரியாகத் தாக்கினார். 

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மனோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனினும் நந்தினி இது தொடர்பாக புகார் எதுவும் அளிக்கவில்லை என்பதால் மனோஜை தாங்கள் கைது செய்யவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.