பணம்! ஆண்கள்! போதை! போலீசை மிரள வைத்த ஸ்வாதி! ஒரே ஒரு சிகரெட் ப்ளீஸ்! கஸ்டடியில் கதறிய பரிதாபம்!

மது போதைக்காக செல்போன் வழிப்பறி செய்து கைதான பெண் போலீசாரிடமே சிகரெட் கேட்டு அடம் பிடித்ததால் போலீசார் எரிச்சலைந்துள்ளனர்.


போதைப் பொருள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களை திருடுவதும் அந்த வாகனத்திலேயே சென்று செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்த ஸ்வாதி என்ற பெண் அவரது காதலன் ராஜூவுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

தனியார் கல்லூரி மாணவியான ஸ்வாதி ஏற்கனவே ஒருவருடன் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் அவர் பாதியில் கழட்டி விடவே ராஜு என்ற டாட்டூ கலைஞருடன் சேர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்த ஸ்வாதி ஏற்கனவே கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்ததால் போதைப் பொருள் இல்லாமல் அவரால் இருக்கமுடியவில்லை. நீண்ட நேரம் ஆகியும் தனக்கு தேவையான பொருள் கிடைக்காமல் போனதால் காவல் நிலையத்தில் இருந்து பெண் காவல் அதிகாரியிடமே சிகரெட் வாங்கித் தருமாறு கெஞ்சியுள்ளார் ஸ்வாதி.

இதுகுறித்து பெண் காவல் அதிகாரி கூறியபோது, படிப்பதற்காக பெண் பிள்ளைகளை அனுப்புகிற பெற்றவர்கள் அடிக்கடி சென்னை வந்து அவங்களோட நடவடிக்கைய கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்வாதி போலத்தான் பெண் பிள்ளைகள் தறுதலையாகி போகும் என ஆதங்கத்தை தெரிவித்தார்.

மேலும் போலீசுக்கிட்டயே சிகரெட் கேக்குறோமேன்னு பயம் இல்லாத அளவுக்கு இந்த பொண்ணு போதைக்கு அடிமை ஆயிடுச்சு. என்னத்த பண்ணித் தொலைக்க என தலையில் அடித்துக் கொண்டார். மேலும் அந்த பெண்ணின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் பணம், ஆண்கள் மற்றும் டிரக்ஸ் என்று வைத்துள்ளார்.

இதன் மூலமே ஸ்வாதி எந்த அளவிற்கு கெட்டுப்போயுள்ளார் என்பது தெரியவருகிறது. ஸ்வாதியும், அவரது காதலன் ராஜூவும் தேனாம்பேட்டையில் அழகுக் கலை நிபுணரின் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியபோது அங்குள்ள சிசிடிவி காட்சி மூலம் போலீசாரிடம் சிக்கினர்.

விசாரணையில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஸ்வாதி பணத் தேவைக்காக செல்போன் பறிப்பதும் அவற்றை விற்று மீண்டும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை வாங்கி பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.