நடுரோட்டில் பெண் போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்! மேலே கை வைத்து அத்துமீறிய நபர்! பதற வைக்கும் சிசிடிவி!

டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வேண்டாம் என வழக்கறிஞரிடம் பெண் காவலாளி ஒருவர் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற  வளாகத்தில் கடந்த 2ஆம் தேதி வழக்கறிஞர் ஒருவரை போலீசார் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில் அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்றுகூடி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தாக்க முயன்றுள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவர் வழக்கறிஞர்களிடம் வன்முறை வேண்டாம் என கெஞ்சியுள்ளார். இதையடுத்து அவரது வார்த்தையைக் கேட்காமல் வழக்கறிஞர்கள் பலர் போலீஸ் அதிகாரிகளை தாக்க முயன்றனர்.

இதையடுத்து இதை வீடியோவாக பதிவு செய்த நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார்.அதில் பெண் காவல் அதிகாரி வழக்கறிஞர் ஒருவருடன் வன்முறையை கைவிடுமாறு கெஞ்சியுள்ளார் அதற்கு அவர் அதைப் பொருட்படுத்தாமல் அருகில் இருந்த பெண் காவல்துறை அதிகாரிகளை தாக்க முயல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறிது நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் வன்முறை வெடித்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் சில மணி நேரம் சலசலப்பு நிலவியது. பிறகு இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கணபட்டு கூட்டம் கலைந்து சென்றது.