சாதி வெறியர்களே...! இயக்குனர் வெற்றி மாறனின் சாட்டையடி பதிவு!

நீங்க பஸ்ல போறீங்களா ? அந்த பஸ் சோட டிரைவரோ , கண்டக்டரோ பறையனா இருக்கப் போறான் பார்த்துக்கோங்க!


என்னது உங்கப்பாவுக்கு ஹார்ட் ஆபரேசன் இரத்தம் வேனுமா? வேணான்டா கீழ் சாதிக்காரன் இரத்தம் ஏதாவது ஏத்திட போறான் அந்த டாக்டரு ! அப்படியே அந்த டாக்டரயும் என்ன சாதி னு கேட்டுக்க! துணி எடுக்க கடைக்கு போறியா அந்த சேல்ஸ் வுமன் பொன்னு என்ன சாதி னு கேளு! அப்படியே அந்த துணிய நெய்தது வன்னியனா , பறையனா, தேவரா னு கேட்டுக்க , அப்புறம் அந்த கடை ஓனரு யாருனு கேட்டுக்க கீழ் சாதிக்காரனா இருக்கப் போறாரு.

அப்புறம் உன் மயிர நீயே வெட்டிக்க , இல்லனா வுட்ரு பெரிய மயிரா இருந்துட்டு போ! இந்த கவர்மென்ட்டு பள்ளிக்கூடத்துல உங்க பசங்கல அனுப்பாதிங்க அங்க நெறைய பற பசங்க படிச்சி தமிழ வாழ வெக்கிறாங்க! அவங்க கை, கிய் பட்ற போகுது!தீட்டாயிடும்.

அப்புறம் அரிசி, பருப்பு, காய்கறி லொட்டு லொசுக்கு இதெல்லாம் வாங்கும் போது லேப்ல குடுத்து செக் பன்னி வாங்கிக்கோங்க! ஏன்னா? கீழ் சாதிக்காரன் எல்லாம் விவசாய கூலியா இருக்கிறான் அவன் கை , கால் ஏதாவது பட்டுருக்கும். இப்படிலாம் வாழ முடியும்னா வாழுங்க இல்லனா இருந்து மட்டும் என்ன சாதிக்க போறிங்க அதனால செத்துடுங்க.