பிரஸ் மீட்டில் வெளிப்பட்ட கிருஷ்ணசாமியின் ஜாதி வெறி! மிரண்டு போன செய்தியாளர்கள்!

தங்கள் இன மக்களை மேல் ஜாதியாக மாற்றிக் காட்டுவதுதான் தன்னுடைய குறிக்கோள் என்று தன்னை சொல்லிக்கொள்வார் டாக்டர் கிருஷ்ணசாமி. திடீரென அவர் பா.ஜ.க.வின் வால் பிடித்தார். என்னவென்று விசாரித்தபோதுதான், கோட்டயத்தில் அவர் கட்டிவரும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கத்தான் அந்த வேஷம் போட்டிருக்கிறாராம்.


நாடாளுமன்றத் தேர்தலில் நின்று கேவலமாக தோற்றுப் போன நிலையில், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கிருஷ்ணசாமி. அப்போது அவரது உண்மையான முகம் தெரியவர பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.

கேள்வி கேட்கத் தொடங்கியபோதே, டாக்டர் அல்லது அய்யா என்று அழைக்கவேண்டும் என்று அன்புடன் அவரே ஒரு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, தோல்வி குறித்து கேள்வி ஒன்றை சேனலின் நிருபர் ஒருவர் எழுப்பினார். உடனே டென்ஷனான கிருஷ்ணசாமி கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசியதுடன் நில்லாமல், ‘நீ எந்த ஊர்? என்ன ஜாதி?’ என்று அப்போதே கொந்தளிக்க, பத்திரிகையாளர்கள் அதிர்ந்தே விட்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்கள் டென்ஷனாக, பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் கிருஷ்ணசாமி. அவர் சொல்வதை மட்டும் பத்திரிகைகளும், மீடியாக்களும் போட்டால் போதும், யாரும் என்னை எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்வது நல்லாவா இருக்கு கிருஷ்ணசாமி.

இதுகுறித்து இன்று சென்னை  பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், ‘‘பத்திரிகையாளர் என்ற  அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும்,  ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒழுங்கா, மன்னிப்பு கேட்கிற வழியைப் பாருங்க கிருஷ்ணசாமி.