கல்யாணத்திற்கும் பிறகும் காதல் நினைவு! இளம் பெண் காதலனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிரிக்கப்பட்ட காதலர்கள் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காதலன் உயிரிழந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ஜெயங்கொண்டத்தை அடுத்த கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் ஜெயங்கொண்டத்தில் தனியார் பாலிடெக்னிக்கில் படித்த நிலையில் உடன் படித்த வேறு சாதிப் பெண்ணான கயல் விழியுடன் காதல் ஏற்பட்டது. 

இதனை அறிந்த கயல்விழியின் பெற்றோரு விஜய் என்பவருக்கு மகளை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குப் பிறகுக் கயல்விழி காதலனின் நினைவில் தவிக்க அரசல் புரசலாக இதனை விஜய் தெரிந்துகொண்டதால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், கயல்விழி தன் காதலனுக்கு போன் செய்து வரவழைத்து இருவரும் ஊருக்குக் கிளம்பிவிட கயல்விழியை காணவில்லை என்ன விஜய் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் இந்த உலகக் சாதியைக் காட்டி வாழ விடாது என அஞ்சிய காதலர்கள் இருவரும் சாவிலாவது ஒன்று சேர முடிவு செய்தனர். 

ஆண்டிமடத்தை அடுத்த கூவத்தூரில் ஒரு பாலத்தின் அருகில் சென்ற இருவரும் ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் கயல் விழி மயங்கியதை இறந்ததாகக் கருதிய பிரபு, தனக்கு ஏதும் ஆகாததைக் கருதி அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

தகவலறிந்து வந்த போலீசார் பிரபுவின் உடலை ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு கயல்விழியை சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இருவரும் வேறுவேறு சமூகத்தினர் என்பதால் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.