வேற எங்கயும் தங்க விடமாட்றாங்க..! சுடுகாடு தான் இப்போ எங்க வீடு..! தலித் தந்தை - மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

போபால்: அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதால் சுடுகாட்டில் தந்தையும், மகனும் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு, ராம்ரத்தன்  என்பவரும், அவரது 8 வயது மகனும் உள்ளனர். இவர்களது வீடு சமீபத்தில் பெய்த மழையில் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் வீடு கட்ட உதவி செய்யும்படி அதிகாரிகளிடம் ராம்ரத்தன் கோரியுள்ளார்.

ஆனால், அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை போலும். இதுதவிர, கூலி வேலை செய்யும் ராம்ரத்தன், மழை காரணமாக, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். இதையடுத்து, வேறு யாரிடமும் உதவி கேட்க விரும்பாத அவர், பசியை அடக்கியபடி தனது மகனுடன் நேராக, உள்ளூர் சுடுகாடு சென்று, அதனையை வசிப்பிடமாக மாற்றிக் கொண்டுள்ளார். சுடுகாட்டில் இவர்கள் வசிக்கும் வீடியோ சமக ஊடகங்களில் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.  

இதையடுத்து, ஊடகத்தினர் அங்கு சென்று ராம்ரத்தினத்தை சந்தித்து, நலம் விசாரித்தனர். அப்போது, ஏழை என்பதால் யாரும் உதவவில்லை எனக் கூறும் ராம்ரத்தினம் இதுதொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தரவும் வலியுறுத்தியுள்ளார்.  

இதுபற்றி தெரியவந்ததும், ராம்ரத்தினத்தை உடனடியாக, நேரில் அழைத்து, பஞ்சாயத்து கட்டிட வளாகத்தில் இரவு நேரத்தில் உறங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக, இன்னும் 2 நாட்களில் ராம்ரத்தினத்திற்கு வேலை மற்றும் உணவு தொடர்பான உதவிகள் அனைத்தும் சரியான முறையில் செய்து தரப்படும் என, ஊடகத்தினரிடம் உறுதிமொழி தரப்பட்டுள்ளது.