கார்த்திக், சரத்குமாரை விரட்டியடிக்கும் ஜாதி அபிமானிகள் – தென்காசி தேர்தல் பஞ்சாயத்து

இந்தத் தேர்தலில் ஜாதியும் பணமும்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் விதமாக திகழ்ந்துவருகின்றன. முழுக்க முழுக்க ஜாதியை நம்பித்தான் வன்னியர்களை வளைத்து ஆட்சியைத் தக்கவைக்க எடப்பாடி பா.ம.க.விடம் தஞ்சம் அடைந்தார். கொங்கு வாக்குகளும் வன்னியர் வாக்குகளும் போதும் என்பதுதான் அவரது எண்ணம்.


அதேபோல் தன்னுடைய பலம் என்னவென்று காட்டவேண்டும் என்று தேவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தினகரன் இறங்கியிருக்கிறார். எங்கெங்கு தேவர் இன மக்கள் அதிகம் இருக்கிறார்களோ, அவர்கள் வாக்குகளை மொத்தமாக அள்ளுவதற்கு ஆசைப்படுகிறார்.

நாடார் வாக்குகளை அள்ளுவதற்குத்தான் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசை செளந்தர்ராஜனும் கன்னியாகுமரி, தூத்துக்குடி தொகுதிகளில் களம் இறங்கியுள்ளனர். இந்த விவகாரங்கள் எல்லா இடங்களிலும் இருந்துவந்தாலும், தென்காசி தொகுதியில் நிலவரம் கலவரமாகியுள்ளது.ஆம், அ.திமு.க. கூட்டணியில் இருந்தாலும் தேவேந்திரகுல வேளாளர் கிருஷ்ணசாமி நிற்கும் தென்காசி தொகுதியில், அவருக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் களம் இறங்கினால் வெட்டுவோம் என்று தேவர் இன மக்கள் ஆவேசமாக நிற்கிறார்கள்.

இந்த நிலையில் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக சரத்குமார் களம் இறங்கினால், அதன்பிறகு அவரை தென் மாவட்டங்களில் நுழைய விடமாட்டோம் என்று கொந்தளிக்கிறார்கள் நாடார் மக்கள்.கார்த்திக், சரத்குமார் இருவருமே அந்த இன மக்களின் வாக்குகளை வாங்கித்தருகிறேன் என்றுதான் கை நீட்டி காசு வாங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் தொகுதிக்குள் நுழையமுடியாத அளவுக்கு எதிர்ப்பு இருப்பதைக் கண்டு இருவரும் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.

சினிமாவில்தான் வாய்ப்பு இல்லையென்றால், அரசியலிலும் காலம் தள்ள விட மாட்டேங்கிறாங்களேப்பா..