ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ் ஏன்..? தெறிக்கவிடும் பா.ஜ.க. அடுத்து லதா ரஜினிகாந்த் வாடகை வழக்கும் தீர்க்கப்படுமோ?

வரும் தேர்தலில் ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வும் எத்தனையோ முயற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. எப்படியோ ஒருவழியாக ஆன்மிக அரசியல் குறித்து பேசிவிட்டார்.


அந்த டெம்போ குறையாமல் ரஜினியை எப்படியும் அரசியலில் இறக்கிவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். அதனால் ரஜினிக்கு வலி ஏற்படுத்தும் எதையும் செய்துவிடக் கூடாது என்று தீர்மானமாக இருக்கிறார்கள்.

அதனால், வரி ஏய்ப்பு தொடர்பாக ரஜினியின் மீது மூன்று வழக்குகளை வருமான வரித்துறை தொடர்ந்து இருந்தது. இந்த வழக்குகள் எல்லாமே சமீபத்தில் போடப்பட்டவை அல்ல. இவை எல்லாமே 2002 முதல் 2005 வரையிலான வழக்குகள்.

இந்த விவகாரத்தில் சுமார் 66 லட்சம் ரூபாய்க்கு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று திடீரென வருமான வரித்துறை வாபஸ் பெற்றுவிட்டது. இதுவரை 50 லட்சத்துக்கு மேலான தொகைக்கு வழக்கு தொடர வேண்டும் என்று இருந்ததை 1 கோடி ரூபாயாக மாற்றிவிட்டதால் வாபஸ் வாங்குகிறோம் என்று அறிவித்துவிட்டது.

ரஜினிக்கே இந்த விஷயம் புதுசு என்பதால் ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டாராம். இதே பாணியில் ரஜினி வீட்டுக்காரம்மாவின் வாடகை பாக்கி விவகாரத்தையும் மத்திய அரசு டீல் செய்யும் என்றே நம்பலாம்.