வேலுமணி குறித்து தாறுமாறு புகார்! ஸ்டாலினுக்கு கோவை போலீஸ் வைத்த ஆப்பு!

அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதுாறாக பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் காவல் நிலையங்களில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவித்தல், மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உள்ளாட்சி துறையில் அமைச்சர் வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பார் நாகராஜனை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஆதாரமில்லாமல் அமைச்சர் வேலுமணி பற்றி அவதுாறாக பேசியதாக ஸ்டாலின் மீது புகார் கூறப்பட்டுள்ளது.