டெல்லி: கார்கில் போரில் பங்கேற்ற முதல் இந்திய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனா வரலாறு, சினிமா படமாக்கப்படுகிறது.
கார்கில் போர்! பாக்., ராணுவத்தை தெறிக்கவிட்ட முதல் பெண்மணி! திரைப்படமாகும் வீரக் கதை!

இந்திய வரலாற்றில், கார்கில் போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில், இந்தியா சார்பாக, பெண் விமானி குஞ்சன் சக்ஸேனா முக்கிய பங்களிப்பு வழங்கினார். அவர், தனது சக பெண் விமானி ஸ்ரீவித்யா ராஜனுடன் இணைந்து, தனது கதையை படமாக்கி வருகிறார்.
இந்தியில் தயாராகும் இந்த படத்திற்கு, 'Gunjan Saxena: The Kargil Girl' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ஜான்வி கபூர், குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்தபோது, பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி, துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்சாமல் பாகிஸ்தான் நிலைகள் மீது குண்டு போட்டுவிட்டு, தப்பி வந்தனர். இந்த வீர தீரமான சாகச கதை, பெண்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என, கூறப்படுகிறது.