அலட்சிய அதிகாரி பணியிடை நீக்கம் - கர்நாடக அரசு அதிரடி!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர்‌ எனும் ரயில் நிலையத்தில் பணி புரிந்த அதிகாரி ஒருவர் ரயில் பயணிகளிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும்போது தனது செல்போனில் பேசிக்கொண்டே அலட்சியமாக இருப்பது போல கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.


நாடுமுழுவதும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகின்ற இந்த சூழலில்.அலட்சியமாக பணிபுரியும் இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினர் தங்களது ஆட்சேபனையை தெரிவித்து வந்த வேளையில்.

நரசிம்மமூர்த்தி எனும் இந்த அதிகாரி அரசு பணியை சரியாக செய்ய தவறிய தாகவும். பணியில் இருந்தபோது அலட்சியமாக செயல்பட்டதாகவும் . உயிருக்கு ஆபத்து உள்ள தொற்றுநோய் விஷயத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி இவரை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது கர்நாடக அரசு.