நடுச் சாலையில் திடீரென பற்றி எரிந்த ரெனால்ட் டஸ்டர் கார்! குபுகுபு என வெளியேறி புகை! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் நடுரோட்டில் ரெனால்ட் டஸ்டர் கார் தீப்பிடித்து எரிந்தது.


சென்னை கொளத்தூரை சேர்ந்த ஸ்மித் என்பவரது Renault Duster காரை அவரது டிரைவர் ஜான் என்பவர் ஓட்டி வந்து புரசை டவுட்டன் மேம்பாலத்தின் கீழ் நிறுத்தினார்.  கார் என்ஜின் இயக்கத்திலேயே இருந்த நிலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்கு சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் கார் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியே வந்தது. உடனே வாகன ஓட்டிகளும், சாலையோரம் வசிக்கும் குடும்பத்தினரும்  நீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

ஆனாலும் என்ஜின் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உருகி எரிந்து கொண்டேயிருந்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். முதல்கட்ட விசாரணையில் காரின் பேட்டரி பகுதியில் ஏற்பட்ட உராய்வினால் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.