வானில் தோன்றிய நெருப்புப் பந்து! அசுர வேகத்தில் பூமியை நோக்கி விரைவு! பீதியில் உறைந்த மக்கள்!

ஆஸ்திரேலியாவில் வானத்தில் பெரிய நெருப்பு பந்து தோன்றிய விவகாரம் இணையதளத்தில் பரவி வரும் நிலையில் அது என்ன என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.


வானத்தில் விண்கற்கள் தோன்றி மறைவது உண்டு. பிரகாசமான் ஒளியுடன் தோன்றும் விண் கற்கள் சில நொடிகளில் மறைந்துவிடும். ஆனால் தெற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளியன்றுஇ இரவு வானில் தோன்றிய திடீர் நெருப்பு ஒளி பெரிதாக வளர்ந்தவாறே நிலத்தை நோக்கி வந்து பின்னர் மாயமானது 

இதனை நேரில் பார்த்த மக்கள் எடுத்த வீடியோக்களும், சி.சி.டி.வி. காட்சிகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது விண்கல் என சில கூறும் நிலையில், அதனை மறுக்கும் ஆய்வாளர்கள், அது வேறு ஏதோ ஒன்று என்று தெரிவிக்கின்றனர். 

நெருப்புப் பந்து தோன்றக் காரணம் என்ன? அது விண்கல்தானா என ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் இன்னும் சில நாட்களில் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது