காரை நிறுத்துற இடமாடா இது? அலேக்காக காரை கைகளால் தூக்கி ஓரம்கட்டிய இளைஞன்! காண்போரை மிரளச் செய்த சம்பவம்!

சாலையில் வழிவிடாமல் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 1,000 கிலோ எடையுடைய காரை ஒருவர் சாதாரணமாக தூக்கி ஓரமாக வைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.


மகிந்திரா டியுவி 300 வகை காரை ஓட்டிக்கொண்டு வந்த ஓட்டுநர் ஒருவர் சாலையோரமாக தவறான இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த மாருதி சுசுகி டிசையர் காரை கண்டார். மேலும் சாலை குறுகலாக இருந்த இடத்தில் அந்த மாருதி சுசுகி டிசையர் கார் மற்ற வாகனங்கள செல்ல முடியாத அளவுக்கு சாலையை அடைத்திருந்தது. இதனால் மகிந்திரா கார் உரிமையாளர் அந்த சாலையை கடக்க முடியாமலும் பின்னால் வரமுடியாமலும் கடுப்பானார்.

நீண்டு நேரம் காத்திருந்தும் அந்த மாருதி காரை யாரும் எடுக்காமல் போனதால் தனது மஹிந்திரா காரில் இருந்து இறங்கினார். பின்னர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சர்வ சாதாரணமாக ஒரு பளுதூக்கி வீரரை போல் செயல்பட்டு அந்த மாருதி சுசுகி டிசையர் கார் அதாவது சுமார் 1,000 கிலோ எடை கொண்ட காரை தூக்கி ஒரு சில அடிகள் நகர்த்தி வைத்தார். பின்னர் வழி கிடைத்து மஹிந்திரா டியூவி 300 கார் உரிமையாளர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வழியை அடைத்து கொண்டு நின்று கொண்டிருந்தது பழைய தலைமுறை டிசையர் கார். தற்போது வெளியாகும் புத்தம் புதிய மாருதி சுஸுகி டிசையர் கார் எடை குறைவாக இருக்கும். ஆனால் பழைய தலைமுறை டிசையர் கார் கூடுதல் எடை கொண்டது. அதிக எடை அதிகமான காரை தனி ஆளாக ஒருவர் தூக்கி நகர்த்துவது உண்மையில் அதிசயமான விஷயம். பொது சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்யும்போது அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு உண்டாகும்.