கார் விபத்தில் சிக்கிய மூளையில் பலத்த காயம்! நினைவு திரும்பியதும் மிகச்சிறந்த ஓவியர் ஆன கார் சேல்ஸ்மேன்! அதிசய நிகழ்வு!

நார்த் கரோலினா: கோமாவில் இருந்து திடீரென கண் விழித்த கார் விற்பனையாளர் புதிய திறமை ஒன்றையும் செய்துகாட்டி அசத்தியுள்ளார்.


நார்த் கரோலினாவில் உள்ள வில்மிங்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்காட் மேல். 42 வயதான இவர், கார் விற்பனை முகவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு, அதிவேகத்தில் கார் ஓட்டிச் சென்றபோது விபத்திற்கு உள்ளானார். இதில், அவருக்கு மூளையில்  அடிபட்டு, சுயநினைவை இழந்தார்.

கடந்த பல மாதங்களாக கோமா நிலையில் இருந்த ஸ்காட் சமீபத்தில் திடீரென கண்விழித்துள்ளார். சுய நினைவை திரும்ப பெற்ற அவர், இதுவரை இல்லாத அளவுக்கு, புதியதாக, பெயிண்டிங் திறமை ஒன்றையும் கைவரப் பெற்றுள்ளார். ஆம், ஒரு கை தேர்ந்த ஓவியரைப் போல விதவிதமான ஓவியங்களை வரைந்து, அவர் அசத்த தொடங்கியுள்ளார். இது பலரையும் வியப்படைய செய்துள்ளது.  

மூளையில் பாதிப்பு ஏற்படும்போது, அரிதிலும் அரிதாக சிலருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும். அப்போது, அவர் இசை, ஓவியம் போன்ற ஏதேனும் ஒரு கலையில் முன்பயிற்சி ஏதுமின்றி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்துவார். அதுபோன்ற ஒரு எதிர்மறை விளைவு ஸ்காட்டிற்கும் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.