அசுர வேகத்தில் சென்ற கார்! திடீரென வெடித்த டயர்! ஓரமாக நின்ற அப்பாவிகளுக்கு நேர்ந்த விபரீதம்! வைரல் வீடியோ!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்று முன் டயர் வெடித்ததில் நிலைதடுமாறி ரோட்டில் ஓரத்தில் உடன் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேனி நெடுஞ்சாலையில் தினேஷ்குமார் என்பவர் தனது காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென அவரது வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்த நிலையில் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் ஓடத் தொடங்கியது.

இந்நிலையில் சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு பலமாக அடிபட்டது/ இதையடுத்து தேனி மாவட்ட நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்த மக்களின் மீது கார் மோதியது இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட தொடங்கினர்.

இந்தக் காட்சியானது நீதிமன்ற நுழைவு வாயில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து கார் மோதி விபத்துக்குள்ளானவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுனர் தினேஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.