முதலில் கார்..! பிறக டிராக்டர்..! இன்னோவாவில் சென்ற 6 ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்ட திக் திக் அனுபவம்..! அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் தென்காசி அருகே விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


சென்னையை பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு ஊர் திரும்பும்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வரும்போது விபத்தில் சிக்கினர்.  

சென்னையில் வசிக்கும் ஐயப்பப் பக்தர்கள் 6 பேர், 40 நாட்கள் விரதம் இருந்து கடந்த வாரம் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்தனர். பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார், கடையநல்லூர் மெயின் பஜாரில் வந்தபோது திடீரென எதிரே வந்த மற்றொரு கார் மோதிவிட்டு நிறுத்தாமல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் நிலைகுலைந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிட்ட, பின்னர் எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் ஐயப்பப் பக்தர்களின் காயம் அடைந்தனர். காரும் சேதம் அடைந்தது. இந்த விபத்துக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரும், டிராக்டர் ஓட்டுநரும் காயமடைந்தனர். காரில் இருந்த ஏர் பலூன் உதவியுடன் ஐயப்பப் பக்தர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.