எதிரே திடீரென வந்த லாரி..! கட்டுப்பாட்டை இழந்த ஜீப்! நேருக்கு நேர் மோதியதில் சிதைந்த 3 பேர்!

ஆத்தூர் அருகே நகைக்கடை அதிபர் உள்பட 3 பேர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்தலே மூன்று பேரும் உயிரிழந்தனர். தப்பி ஓடிய லாரி ஓடுநனரை காவல்துறையினர் வலைவீச்சு தேடிவருகின்றனர்.


கோவையைச் சேர்ந்த கவரிங் நகை கடையின் ஒனர் தான் பாலசுப்பிரமணியன், இவர் நாமக்கல்லை சேர்ந்த வியாபாரி வரதராஜ் ஆகியோர் நகை வாங்க ஒரு காரில் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நகைகளை வாங்கிவிட்டு ஆத்தூர் வழியாக மீண்டும் கோவைக்கு திரும்பி கொண்டு இருந்த வேளையில், அந்த கார் ஆத்தூர் தென்னங்குடி பாளையம் அருகே வந்தபோது எதிரே கொரியர் லாரியும் வந்துள்ளது. 

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலையில் பாலசுப்பிரமணியன் காரும், எதிரே வந்து கொண்டு இருந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், அந்த காரை ஓட்டிய ஓட்டுநனர் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். நகைகடை உரிமையாளர், வியாபாரி வரதராஜ் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். பின்னர்,

இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் காவல் துறையினர், உயிருக்கு போராடி கொண்டு இருந்த இருவரையும், மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவ கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனியின்றி அவர்களும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் ஆத்தூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல் தூறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை யும் தேடி வருகின்றனர்.