படுவேகத்தில் வளைவில் திரும்பிய கார்..! திடீரென திறந்த கதவு..! உள்ளே இருந்து விழுந்த குழந்தை..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ உள்ளே!

கேரளாவில் கார் ஒன்று வேகமாக சாலையில் திரும்பும்போது ஒரு குழந்தைகீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


கேரள மாநிலம் மலப்புரம் - கொட்டக்கால் சாலையில் டிசம்பர் 24 ஆம் தேதி வளைவு ஒன்றில் கார் ஒன்று வேகமாக திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அந்த காரின் பின் இருக்கையில் குழந்தை இருந்துள்ளது. அதே சமயம் காரின் கதவு சரியாக மூடப்படவில்லை. கார் வேகமா சென்றதால் ஏற்பட்ட அதிர்வில் காரின் கதவு திடீரென திறந்து கொண்டது.

சரியாக மூடப்படாத கதவு திறந்துகொள்ள, காரில் இருந்த குழந்தை ஒன்று தவறி சாலையில் விழுந்துள்ளது. குழந்தை விழுந்த அடுத்த வினாடியே பின்னால் ஒரு கனகர வாகனம் வந்தது. உடனே சுதாரித்த அந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். அவரும் கவனக்குறைவாக இருந்திருந்தால் குழந்தையின் மிது வாகனம் ஏறி உயிரிழந்திருக்கும்.

இதையடுத்து காரில் இருந்த நபர் பதறியடித்து ஓடி வந்து குழந்தையை பத்திரமாக தூக்கிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.