பூஜை செய்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல்! ஸ்டார் வேட்பாளர்களை கரைசேர்த்த ஸ்டாலின்!

பூஜை செய்து கொண்டுவரப்பட்ட தி.மு.க. வேட்பாளர் பட்டியல் … ஸ்டார் வேட்பாளர்களை அ.தி.மு.க.வுடன் மோதவிடாமல் காப்பாற்றிய ஸ்டாலின்


நாத்திக கட்சியான தி.மு.க. கருணாநிதி காலத்திலேயே சாயம் போனது. ஸ்டாலின் காலத்தில், அவரது மனைவி துர்கா காசிக்குப் போய் கருணாநிதி அஸ்தியை கரைத்தது பழைய செய்தி. இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் கருணாநிதி சமாதிக்குப் போகும் முன்னரே வீட்டில் வைத்து மெகா பூஜை செய்யப்பட்டதாம். அதன்பிறகே அந்தப் பட்டியல் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்டாலின் அதனை கொண்டுபோய் கருணாநிதி சமாதியில் வைத்தது மட்டுமின்றி, உடல் நலமின்றி படுத்துக்கிடக்கும் அன்பழகனிடம் காட்டி, அவரை மேலும் டென்ஷனாக்கி வந்தார். இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் எல்லோரும் ஆச்சர்யப்படும் விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது தி.மு.க. வி.ஐ.பி.கள் அனைவருமே நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதாமல் கூட்டணிக் கட்சியுடனே மோதுகிறார்கள். அதனால், ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றி ஈசி என்கிறார்கள்.

1. தயாநிதி மாறன் – மத்திய சென்னை  - பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

2. டி.ஆர்.பாலு – ஸ்ரீபெரும்புதூர் – இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி

3. ஜெகத்ரட்சகன் – அரக்கோணம் – பாட்டாளி மக்கள் கட்சிதான் எதிரி

4. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் – தஞ்சாவூர் – வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்

5. கனிமொழி – தூத்துக்குடி – இங்கு பாரதிய ஜனதா கட்சி நிற்கிறது.

6. கெளதம் சிகாமணி – கள்ளக்குறிச்சி – விஜயகாந்த் கட்சி களத்தில் இருக்கிறது.

7. டி.எம்.கதிர் ஆனந்த் – வேலூர்  - புதிய நீதிக்கட்சி நிற்கிறது.

8. கலாநிதி விராசாமி – வட சென்னை – விஜயகாந்த் கட்சி நிற்கிறது.

ஆக, இத்தனை பேர் வெற்றியும் மிகவும் எளிது என்கிறது தி.மு.க. வட்டாரம்.