சென்னை: புற்றுநோய் மற்றும் சாலை விபத்து காயங்களுடன் உயிருக்குப் போராடும் பெண், உதவி கேட்டு, கோரிக்கை விடுத்துள்ளார்.
புற்று நோயை கண்டுபிடித்த ஒரே வாரத்தில் விபத்தில் சிக்கிய துயரம்! உதவ ஆள் இல்லாமல் தவிக்கும் 46 வயது பெண்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. 46 வயதாகும் இவருக்கு சமீபத்தில்தான் மார்பக புற்றுநோய் இருப்பதாக, மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனால், கடும் சோகத்தில் மூழ்கிய சுஜாதா, தனது கணவர் பிஜூ பி உடன் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை சர்ச் சென்றுள்ளார்.
அங்கே தங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி, பாதிரியாரிடம் கேட்டுக் கொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தீர்மானித்தனர். ஆனால், சர்ச் வழிபாடு முடிந்து பைக்கில் அவர்கள் வீடு திரும்பியபோது அம்பா ஸ்கைவால்க் மால் அருகே, வேகமாக வந்த கார் ஒன்று, அவர்களின் பைக் மீது மோதியது.
இதில், பிஜூ இடது கையில் காயமடைய, சுஜாதா இடுப்பு, கழுத்து, தலை, கால் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தார். அவ்வழியே சென்ற பாதசாரிகள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், தனியார் மருத்துவமனையில் அதிக செலவாகும் என்பதால், அவர்கள் இருவரும் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிஜூ ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் படிப்பதால், வீட்டுச் செலவு, மருத்துவச் செலவை சமாளிக்க முடியாமல் பிஜூ தம்பதி போராடுகின்றனர். ஏற்கனவே 2016ல் வந்த மழை, வெள்ளத்தில் உடைமைகளை இழந்து போராடி வரும் சுஜாதா, பிஜூவிற்கு தற்போது புற்றுநோய் மற்றும் சாலை விபத்து மேலும் மன உளைச்சலை அதிகரித்துள்ளது.
இவர்களுக்கு, சுமார் 30 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி தேவைப்படுவதால், Milaap என்ற தொண்டு நிறுவன உதவியுடன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், https://milaap.org/fundraisers/support-bijumon-b என்ற இணையதள முகவரியில் சென்று, தங்களால் முடிந்த நிதி உதவி அளிக்கலாம்.