இனி பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம் பிடிக்கப்படும்! கனரா வங்கி அதிர்ச்சி அறிவிப்பு!

பொதுத்துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி ஜூலை 1 முதல் 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


அதன்படி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் மூன்று முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும் என அத்திட்டத்தில் தெரிவித்துள்ளது.இது வங்கி பயனாளர்களை மத்தியில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் வாடிக்கையாளர்கள் ரூபாய் 50,000 மேல் டெபாசிட் செய்ய முடியாது. மற்றும் அந்த 50,000 ரூபாயும் மூன்று முறை மட்டுமே வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய முடியும் எனவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 50,000 மேல் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சர்வீஸ் டாக்ஸ் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டமானது ஜூலை 1 ஆம் முதல் கனரா வங்கியில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும் போது 50,000 ரூபாய் மட்டுமே செலுத்த முடியும். மாதம் மூன்று முறை மட்டுமே டெபாசிட் செய்யமுடியும். மற்றும் 

இரண்டாவது திட்டமானது வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஏடிஎம் மிஷினில் இருந்து 5 முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனவும் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 100 வரை வசூலிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மூன்றாவது திட்டமாக கனரா வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 5,00,000 வரை மட்டுமே ரொக்கமாக பெற்றுக் கொள்ள முடியும் அதற்கு மேல் எடுக்கும் ரூபாய்க்கு சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியில் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த கொள்கையின் படி பலருக்கு சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 5 முறைக்கு மேல் பணம் எடுத்து வரும் ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 100 சர்வீஸ் சார்ஜ் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் யாருக்கும் எந்த ஒரு குறுஞ்செய்தியை அனுப்பப்படவில்லை எனவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொள்கையானது அனைத்து வங்கிகளுக்கும் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தான். இந்த சேவையானது இம்மாத இறுதிக்குள் அனைத்து வங்கிகளிலும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.