லிப்டில் ஏறிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

கனடா டொரண்டோவில் உள்ள குடியிருப்பு பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லிஃப்டில் அவரது வீட்டிற்கு செல்வதற்காக ஏறியுள்ளார்.


அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரோடு லிப்டில் ஏற திடீரென்று அவரைத் தாக்கி அவரது பர்ஸை பறிக்க முயற்சி செய்துள்ளார். தைரியமாக திருடனை எதிர்த்து போராடியும் பர்ஸை அவரால் பாதுகாக்க முடியவில்லை.

பர்ஸை பெண்ணிடம்  இருந்து பிடுங்கிய திருடன்  லிப்டிலிருந்து பெண்ணை வெளியில் தள்ளி விட்டு தப்பியோடியுள்ளான். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருடிய நபரை விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு கைது செய்து, கொள்ளை கொலை முயற்சி  உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட திருடனை வருகின்ற 24-ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.