கனடாவில் மீண்டும் தமிழர்களின் பேவரிட் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி..!

கனடா பொதுத் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வாக்களிக்காததால் லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ மைனாரிட்டி அரசாகத்தான் ஆட்சி அமைக்க உள்ளார்.


கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போராட்டம் இருக்கும் என தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்க 170 இடங்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் 177 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ. லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கனடா பிரதமராக பதவி ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்றார். இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விமர்சனங்கள் தேர்தல் பிரச்சாரத்துன்போது எழுப்பப்பட்டால் எதிர்பார்த்த அளவிற்கு வாக்கு கிடைக்காததால் மைனாரிட்டி அரசு அமைக்க உள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி லிபரல் கட்சி 145 இடங்களையும், கன்சர்வேடிவ் கட்சி 115 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதனிடையே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். “அற்புதமான மற்றும் இந்தப் போராட்ட வெற்றிக்கு வாழ்த்துகள் ஜஸ்டின். அமெரிக்கா - கனடா ஆகிய இரு நாடுகளின் நலனுக்கு உங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.