சிறுவர் - சிறுமிகளை கூட..! நித்யானந்தா - ரஞ்சிதா மீது பெண் சீடர் கூறும் திடுக் திக் புகார்! என்ன நடக்கிறது பிடதியில்?

பெங்களூரு: நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா இணைந்து சிறுவர்களை சித்ரவதை செய்கிறார்கள் என்று கூறி அவர்களின் ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகாரை எழுப்பியுள்ளார்.


நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியான நாள் முதலாக,  இவர்கள் 2 பேரையும் சமூக ஊடகங்களில் பலரும் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் இதுபற்றி கொஞ்சம் கூட இதுவரை அலட்டிக் கொள்ளவில்லை. குறிப்பாக, அந்த வீடியோ வெளியான பிறகு ரஞ்சிதா முழுநேர நித்யானந்தா அடிமையாகவே மாறி, அவரது மடத்திலேயே முக்கிய நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் வெளிநாட்டினர் பலரும் சீடர்களாக சேர்வது வழக்கமாகியுள்ளது. இப்படியாக, கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டெபனி லாண்ட்ரி என்ற பெண் சமீபத்தில் அங்கு இணைந்தார்.  

ஸ்ரீ நித்ய ஸ்வரூபா பிரியானந்தா என்ற பெயருடன் கடந்த சில ஆண்டுகளாக, நித்யானந்தாவின் சீடராக இருந்த அப்பெண், திடீரென சராமரியாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா மடத்தில் உள்ள ஒரு சிறுவன் மற்றும் சிறுமியை மடத்தின் ஊழியர்கள் கடும் பட்டினி போட்டு அடித்து உதைப்பதை காண நேரிட்டதும், சாமியார் வாழ்க்கை மீது அதிருப்தி ஏற்பட்டதாக, கனடா பெண் பேசுகிறார்.  

''ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நித்யானந்தா மடத்தில் சேருவோரை அடித்து உதைத்து, மூளைச் சலவை செய்து, பணத்தை பிடுங்கிக் கொள்வது அல்லது வேறு ஏதேனும் முறைகேடான காரியங்களை செய்வது போன்றவற்றை நித்யானந்தாவும், ரஞ்சிதா உள்ளிட்டோரும் வாடிக்கையாக செய்கின்றனர். இதுதெரியாமல் அங்கு சேர்ந்த நான், சில ஆண்டுகளிலேயே உண்மை புரிந்ததும், உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி கனடா ஓடிவந்துவிட்டேன்,'' என்றும் அந்த வீடியோவில் சாரா குறிப்பிடுகிறார்.