உன்னை இனி அப்பா என்று அழைக்கமாட்டேன் என்ற மகள்! காரணம்! மனைவியுடன் கணவன் தகாத செயல்!

கனடாவில் தம்பதி ஒருவர் சிங்கத்தை கொன்று அதன் அருகில் பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அப்போது அதை பார்த்த அவரது மகள் தன் தந்தையை இனிமேல் தந்தை என அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.


சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் கன்னட தம்பதியர் ஒருவர் சுற்றுலா சென்றுறிருக்கையில் அங்கு ஒரு சிங்கத்தை கொன்று அதன் அருகில் முத்தமிடுவது போல் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த டேரன் மற்றும் அவரது மனைவி கரோலின் கார்ட்டர் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்களது விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இந்த காட்டிற்குள் சிங்கத்தை கொன்று புகைப்படம் எடுத்துள்ளனர். இதை சமூகவலைதளத்தில் பார்த்த அவரது மகள் சிட்னி கார்ட்டர்(19), தனது தாய் தந்தையரின் செயலை கண்டு கோபமுற்று தனது தந்தையை கண்டபடி திட்டியுள்ளார்.

இதையடுத்து அவரது மகள் யூடியூபில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தான் விலங்குகளை அதிகம் நேசிப்பவராக இருப்பதால் எந்த விலங்குக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை எனது தாய் தந்தையர் இந்த மாதிரியான செயலை செய்வார்கள் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனவும் அவர்களது இந்த அருவருப்பான செயல் தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தன்னை கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டார். 10 ஆண்டுகளாக தனது தாய் தந்தையை சந்திக்கவில்லை .

இந்நிலையில் அவர் அந்த சிங்கத்தை கொள்வதற்காக 12000 பவுண்டுகள் செலுத்தியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததில் இருந்து தனக்கு எந்த ஒரு உதவிக்காகவும் பணம் அனுப்புவது இல்லை எனவும் வருந்தியுள்ளார்.

இதையடுத்து அந்த வீடியோவின் இறுதியில் "அப்பா நீங்கள் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என்றால் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இவ்வாறு விலங்கினை துன்புறுத்தியதற்காக இனிமேல் நான் உங்களை அப்பா என அழைக்க மாட்டேன்" நீங்கள் ஒரு கொடூரமான மனிதர் என்று அவரது மகள் கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.