CSK ஹாட்ட்ரிக் வெற்றி! ரசிகர்களை கொண்டாட வைத்த தல தோனி ,பிராவோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கஆட்டக்காரர்கள் ராயுடு வந்த வேகத்தில் அவுட் ஆனார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம் இல்லாதது போல இருந்ததால் சென்னை அணி பொறுமையாக ஆடியது. வாட்சன் 13 ரன்களுக்கும் , ஜாதவ் 8 ரன்களுக்கும் வெளியேற சென்னை அணி ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

பின்னர் ரெய்னா வுடன் இனைந்து தோனி சென்னை அணியின் ரன்னை பொறுமையாக உயர்த்தினர். சுரேஷ் ரெய்னா 36 ரன்களுக்கு வெளியேற, களமிறங்கிய பிராவோ , தோணியுடன் இனைந்து அதிரடியில் இறங்கினா5ர்.பிராவோ 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் , தல தோனி ராஜஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கினார். கடைசி ஒவேரில் கடைசி மூன்று பந்தில் மூன்று சிக்ஸ் அடித்து அரங்கயே அதிர வைத்தார்.சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.

 பின்னர்  களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சென்னைய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 14 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்தனர். பின்னர் களமிறங்கிய திரிபாதி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர்.ஸ்மித் 28 ரன்களுக்கும், திரிபாதி 39 ரன்களையும்  எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற நிலையில் அந்த ஓவரை பிராவோ வீசினார்.46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பிராவோ பந்து வீச்சில் அவுட் ஆனார்.மேலும் அந்த ஓவரின் 5வது பந்தில் ஷ்ரேயஸ் கோபாலயும் அவுட் செய்து வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் வசமாக்கினார் பிராவோ . இதனால்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.