தினகரன் கட்சியினர் வேட்டியை உருவும் சி.வி.சண்முகம்! டெல்லி முகாமின் பின்னணி!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் விடுவதற்குத் தேவையான வேலைகளை முன்னெடுத்து செய்பவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். இப்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வழக்கு ஒன்று தொடங்கியிருக்கிறார்.


அ.தி.மு.க.வின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் படத்தை தன்னுடைய கொடியில் தினகரன் பயன்படுத்தி வருகிறார், அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டிக்கொண்டு திரிகிறார்கள். அதனால் இதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் சண்முகம்.

இரண்டு கட்சியினருமே கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு என்றுதான் வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த கரை வேட்டிக்கு அ.தி.மு.க. மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்கிறார்கள் தினகரன் கட்சியினர். இந்த கரை வேட்டியை பதிவு செய்திருந்தால் மட்டுமே, கட்டக்கூடாது என்று சொல்லமுடியும் என்று லா பாயின்ட் பேசுகிறார்கள்.

அ.தி.மு.க. கரைவேட்டி கட்டுவதை நிறுத்தவில்லை என்றால், வேட்டியை உருவும் போராட்டம் நடத்துவோம் என்று அ.தி.மு.க. டென்ஷன் ஆகிறது. வேகமா நடத்துங்கப்பா! தமிழர்களின் மானம் போகட்டும்.