தேசிய நெடுஞ்சாலை ஓரம்! தனித்து நின்ற கார்! உள்ளே 3 சடலங்கள்..! அங்கு சென்று பார்த்து அதிர்ந்த போலீஸ்! பதற வைக்கும் சம்பவம்!

உத்தர பிரேதேச மாநிலத்தில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் குடும்பத்தாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் யமுனா நெடுஞ்சாலையில் கார் ஒன்று தனித்து நின்றுகொண்டிருந்துள்ளது. ரோந்து பணியில் இருந்த பொலிஸார் காரின் உள்ளே சிலர் இறந்துகிடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கண்ணாடியை உடைத்து உள்ளிருந்த சடலங்களை கைப்பபற்றினர்.

ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருந்தான். பின்னர் சிறுவனை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர்கள் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் அவரது மனைவி நேஹா மற்றும் மகள் தன்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சூர்யா என்பதும் தெரியவந்துள்ளது. புத்தாண்டு கொண்டாடுவதற்காக வந்த தொழிலதிபர் நீரஜ் தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லை காரணமாக நீரஜ் விபரீத முடிவு எடுத்தாரா என போலீஸ் விசாரித்து வருகின்றனர்.