தாய், மனைவி, குழந்தைகள்! கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொலை! 3 ஆண்டுகளுக்கு பிறகு வியாபாரிக்கு கிடைத்த தண்டனை! ஏன்? என்ன தெரியுமா?

பண மதிப்பிழப்பில் தொழிலில் நஷ்டமடைந்தால் சொந்த தாய், மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கோடூர நபருக்கு தூக்குத்தண்டனை!


கடந்த 2017 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பில் ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் அடிந்த ஜவுளி கடை உரிமையாளர் கடன் தொல்லை அதிகமானத்தால் தனது தாய், மனைவி, 2 குழந்தைகளை கொன்ற நபருக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது.

ஜவுளிக்கடை உரிமையாளாரன தாமோதரன் தாம்பரம் அருகே உள்ள பல்லாவரத்தை அடுத்த பம்மல் திருவள்ளுவர் நகர் நந்தனார் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வருகிறார். இவருடன் தாய் சரஸ்வதி , மனைவி தீபா , மகன் ரோஷன் , மகள் மீனாட்சி ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களின் குழந்தைகள் ரோஷன் மற்றும் மீனாட்சி இருவரும் மீனம்பாக்கம் மற்றும் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முறையே 2-ம் வகுப்பு மற்றும் யு.கே.ஜி., படித்து வந்தனர். இவர் மனைவி தீபா, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்த பண மதிப்பிழப்பு காரணமாக தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளார். மேலும், 5 வங்கிகளில் வீட்டுக் கடன், நகை கடனும் வாங்கி உள்ளார். இந்த கடன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார் தாமோதரன் .

இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மைத்துனர் ராஜாவிடம் செல்போனில் பேசிய தாமோதரன் “எனக்கு வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு போனை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, தன் பெற்றோரை தாமோதரன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு சென்றபோது, கதவு வெறுமனே சாத்தப்பட்டு இருந்தது. சந்தேகமாக தாமோதரனின் மாமனார் மற்றும் மாமியார் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

உள்ளே பார்த்ததும் அதிர்ச்சிக்கு உள்ளானர். அங்கு மகள் தீபா, பேரன் ரோஷன், பேத்தி மீனாட்சி மற்றும் தாமோதரனின் தாய் சரஸ்வதி ஆகியோர், கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தாமோதரனும், கழுத்து மற்றும் கையை அறுத்த நிலையில், சுவரில் சாய்ந்து கிடந்தார். இதனை கண்டு உறைந்த இருவரும் உடனடியாக அவர்கள் 5 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இவர்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பரிசோதனையில் தீபா, சரஸ்வதி, ரோஷன், மீனாட்சி ஆகியோர் இறந்து போனது தெரியவந்தது. தாமோதரன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை குறித்து சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து. மேலும், சிகிச்சைக்கு பிறகு தாமோதரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் வக்கீல் சீதாலட்சுமி ஆஜரானார் .தாமோதரன் தரப்பில் தனது குடும்பத்தினரை கொலை செய்வதற்கு முன்பு பண மதிப்பிழப்பால் தன் தொழில் பாதித்ததால் கடன் அதிகமானதாக எழுதிய கடிதம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் தாமோதரன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார் நீதிபதி வேல்முருகன். குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்ததற்காக தாமோதரனை சாகும் வரை தூக்கிலிடவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.