திடீரென குறுக்கே வந்த பைக்! அடித்து தூக்கி பல்டி அடித்த சொகுசு கார்! மகள்களுடன் தொழில் அதிபர் பலியான பரிதாபம்!

மதுரை அருகே மிகப் பெரிய தொழில் அதிபர் தனது மகள்களுடன் விபத்தில் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உஸ்மான் அலி என்பவருக்கு அப்பகுதியில் ஏராளமான உணவகங்களும் அது தவிர்த்து நிறைய தொழில்களும் இருந்தன. மிகப் பெரிய செல்வந்தரான இவருக்கு ராமநாதபுரத்தில் மட்டுமின்றி மலேசியாவிலும் சொந்தமான உணவகங்கள் இருந்தன. இந்நிலையில் மலேசியா சென்ற இவர் அங்கே உள்ள உணவுகளை பார்வையிட்டுவிட்டு  மலேசியாவில் இருந்து விமானம் ஏறி மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதையடுத்து தனது மகள்களான  தஸ்லிமா பானு கைநூல் ரசியா மற்றும் தனது மருமகனான முகமது கசாலி உள்ளிட்டோருடன் மதுரையில் இருந்து சொந்த ஊரான சாத்தான் குளத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

இந்நிலையில் சோமப்புரத்தை அடுத்த நான்கு வழிச்சாலையில் சங்கர் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க திடீரென முயன்றார். அவர் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக உசான் அலி  காரை திருப்பினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக கார் சங்கர் மீது மோதிய நிலையில், தடுப்புச் சுவரின் மீதும் பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் உஸ்மான் அலியும் அவரது மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க, இருசக்கர வாகனத்தில் வந்த சங்கரும் உயிரிழந்தார். அவரது மருமகனான முகமது கசாலி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.