சென்னை சென்டிரலில் வழியாக திருப்போரூருக்கு சென்ற மாநகர பஸ், தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே அண்ணாசாலையில் எதிர்பாரத விதமாக ஓடியதில் இருப்பெண்கள் படுகாயமடைந்தனர்.
அசுர வேக பேருந்து! 2 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்! பிறகு டிரைவருக்கு நேர்ந்த விபரீதம்!
சென்னை சென்டிரலில் வழியாக திருப்போரூருக்கு சென்ற மாநகர பஸ், தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே அண்ணாசாலையில் எதிர்பாரத விதமாக ஓடியதில் இருப்பெண்கள் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து ஓட்டுநரை வெளியே இழுத்து பொதுமக்கள் தர்ம அடிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனாம்பேட்டை வழியாக வந்த மாநகர பேருந்து எதிர்ப்பாராத விதமாக கட்டுபாடு இழந்து தாறுமாறாக ஓட எதிரில் வந்த ஆட்டோ மற்ற ஸ்கூட்டர் மீது மோதியதில் இரு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த பின்னர், டிரைவர் குருசாமியை வெளியே இழுத்து பொதுமக்கள் தர்ம அடிக்கொடுத்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த மற்ற பேருந்து கண்டெக்டர் மற்றும் டிரைவர் பொதுமக்கள் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் விரைந்து வந்த போலீசார் உடனடியாக இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர் மேலும், குருசாமி தாக்கிய 2 நபரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.