பயணிகள் பேருந்து மீது மோதிய லாரி! இரண்டும் தீப்பிடித்த கொடுமை! சம்பவ இடத்திலேயே 10 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம், ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி பேருந்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.


ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம், ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, பேருந்தின் மீது மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்த விபத்தில் பஸ்சிற்குள் பயணிகள் சிக்கி கொண்டனவிபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

விபத்தில் சிக்கிய வாகனங்கள் சாலையில் கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.