டிரக் எதிரில் வருவது கூட தெரியாமல்..! அதிவேகத்தில் மோதிய பேருந்து! 9 பேர் ஸ்பாட் அவுட்! அதிர வைத்த விபத்து!

லக்னோ: பஸ் - டிரக் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா பகுதியில் இருந்து ஃபதேபூர் பகுதிக்கு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதில், 45 பேர் பயணித்துள்ளனர். இந்த பேருந்து செம்ரி நுல்லா பகுதிக்கு வந்தபோது ஃபதேபூர் சாலையில் எதிரே வந்த டிரக் வேகமாக மோதியது.

இதில் பஸ் பெரும் சேதத்திற்கு உள்ளானது. உள்ளே இருந்த பயணிகளில், ஒரு குழந்தை உள்பட 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் தெரிவித்துள்ளார்.