அசுர வேகத்தில் சென்ற பேருந்து! திடீரென செயல் இழந்த பிரேக்! 11 பேர் பலியான பரிதாபம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் பிரேக் பிடிக்காமல் தனியார் பேருந்து எதிரில் வந்த வாகனம் மீது மோதிய கொடூர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹசாரிபக்கில், தனுவா காட்டி  அருகே இன்று காலை வழக்கம் போல பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து சுமூகமாக கிளம்பியது. ஆனால் பாதி வழியே பிரேக் செயலிழந்தை அறிந்த ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும்,  பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்  பேருந்தில் பயணித்த 25 பேர் படுகாயமடைந்ததுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான பேருந்து புறப்படும் போதே அதன் ஓட்டுநர் சரியாக கவனித்து தான் இயக்கினாரா அலட்சியமாக செயல்பட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை க்கு உட்படுத்தபடலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.