நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 14 பேர் பலியான கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
50 பயணிகளுடன் அதிவேகம்! கரடு முரடான சாலையில் கவிழ்ந்த பஸ்! துடிதுடித்த 14 பேர்! பதற வைக்கும் விபத்து!
நேபாளத்தில் உள்ள சிந்துபால்சாக் மாகாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்து திடீரென கவிழ்ந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்திருக்கின்றனர்.
98 பேர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் தரப்பு விசாரித்ததில், சிறிய பேருந்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் கவிழ்ந்துள்ளது என ஒரு தரப்பு கூறிவருகிறது. பஸ் டயர் வெடித்தால் விபத்து நேரிட்டு இருக்கிறது என மற்றொரு தரப்பு கூறியது.
பேருந்து சென்ற பகுதி கரடுமுரடான பகுதி என்பதால் மோசமான சாலையில் விபத்து நேரிட்டு இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது. மோசமான சாலை காரணமாக, இப்பகுதியில் ஏற்கனவே ஒரு சில பேருந்துகள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.