பிரபல உணவகத்தில் பர்கர் சாப்பிட்டவர் ரத்த வாந்தி! அதிர வைக்கும் காரணம்!

புனேவில் பர்கர் கிங் எனப்படும் பிரபல பர்கர் கடை ஒன்றில் விற்கப்பட்ட பர்கரில் இருந்து கண்ணாடி துண்டுகள் இருந்தது. இதை அறியாமல் சாப்பிட்ட ஒருவரின் வாயிலிருந்து ரத்தம் வந்ததால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


புனேவில் எப்சி ரோட்டில் உள்ள பர்கர் கிங் கடைக்கு நான்கு நண்பர்கள் மதிய உணவிற்காக பர்கர் சாப்பிட சென்றுள்ளனர். அதில், சஜித் பதான் என்பவர் அவர்கள் சாப்பிட்ட பிறகு தொண்டையில் எரிச்சலூட்டுவதாக கூறி உடனடியாக வாயிலிருந்து ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதேநேரம் அருகில் இருந்த நண்பர்கள் தங்களது பர்கரை பார்க்கையில் அதில் கண்ணாடித் துண்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இவருக்கு கடையின் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் நண்பர்கள் புகார் அளித்துள்ளனர். 

காவல்துறை விசாரணையில் நண்பர்களில் ஒருவர் கூறுகையில், சஜித் எங்களை நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்தார். அப்போது எங்களுக்கு பர்கர் பிடிக்கும் என்பதால் நாங்கள் சாப்பிட பர்கர் வாங்கி வந்தார். அதை அவரும் சாப்பிடுகையில், உடனடியாக தொண்டை எறிவதாக எங்களிடம் கூறிய அடுத்த கணமே ரத்த வாந்தி எடுப்பது போல் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்து நாங்கள் உடனடியாக எங்களது பர்கரையும் பரிசோதித்ததில் அதில் கண்ணாடித் துண்டுகள் இருந்தது. உடனடியாக சஜித்தை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு நாங்கள் காவல்நிலையம் நோக்கி வந்தோம் என்றார்.

இதுகுறித்து கடையில் வேலை செய்து அவர்களிடம் விசாரிக்கையில் கடையின் பெயரை கெடுப்பதற்காகவே இவர்கள் இப்படி நாடகமாடுகிறார் கண்ணாடித்துண்டுகள் இருக்க வாய்ப்பே இல்லை என்று முற்றிலுமாக தவிர்த்தனர்.

அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும்,  விரைவில் உண்மையை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் காவல்துறை தெரிவித்தது.