எலக்ட்ரிக் டிரெயினில் எருமை மாட்டை ஏற்றிய இளைஞன்! வைரல் வீடியோவின் பரபர பின்னணி!

மேற்கு வங்க மாநிலத்தில் புறநகர் மின்சார ரயிலில் எருமை மாட்டை இளைஞர் ஒருவர் அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாக வைரலாகி உள்ளது.


சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் பொதுவாக பொதுமக்கள் நிற்பதற்கே இடம் கிடைக்காது. நெரிசலில் சிக்கி சின்னா பின்னமாகித்தான் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாநகரில் எருமை மாட்டுடன் மின்சார ரயிலில் பயணித்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எருமை மாட்டுடன் அந்த இளைஞர் ஏறிய பிறகு இருக்கையின் அருகே மாட்டை கட்டிப்போட்டுள்ளார். சிறிது நேரம் எருமை மாட்டுடனே ரயிலில் பயணித்துள்ளார். இதனை ரயிலில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நபர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாக பரவி வருகிறது. அவர் எங்கு ஏறினால் என்ன, இறங்கினால் என்ன எருமை மாட்டிற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது ரயிலில் பயணம் செய்ய. வேறு என்ன வேண்டும்? எருமை மாட்டுக்கு டிக்கெட் வாங்கினாரா தெரியாது. டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டினாரா என்பதும் தெரியவில்லை.