விருப்ப ஓய்வுக்கு மிரட்டப்படும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்! மீண்டும் போராட்டம் ஆரம்பம்!

போராட்ட களத்தில் பிஎஸ்என்எல். ஒரு காலத்தில் தொலைத்தொடர்பு துறையின் முடிசூடா மன்னனாக வலம் வந்தது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்.


ஆனால் தற்போது அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே வருமானம் இன்றி திண்டாடி வருகிறது என்ற செய்தி.. பேரிடியாக இறங்கியுள்ளது அதன் ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும்.

இந்நிலையில் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் உட்பட, 50 வயதிற்கு மேற்பட்டவர்களை தன்னார்வ ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியை அனுப்பி வருகிறது பிஎஸ்என்எல் நிர்வாகம்.

இதுவரையில் சுமார் 77 ஆயிரம் ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வேலையில் இருந்து விடுபட விண்ணப்பம் அளித்துள்ளதாக இந்த நிர்வாகம் கூறியுள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில்...

50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களிடம் கட்டாயமாக விருப்ப ஓய்வு மனு கொடுக்க கூறி வற்புறுத்தி வருவதாகவும், மேலும் தொழிற் சங்கங்களில் உள்ள ஊழியர்களிடம் அதிகப்படியான கெடுபிடிகள் செய்து, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது பிஎஸ்என்எல் நிர்வாகம் என்று கூறுகின்றனர்..

தொழிற்சங்கங்களின் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிஎஸ்என்எல் நிர்வாகம். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 75 முதல் 80 சதவீதம் வரை ஊழியர்களின் சம்பளத்திற்காகவே செலவிடப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயை உயர்த்த புதிய திட்டங்கள் எதுவும் இல்லாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிஎஸ்என்எல் செயல்பட்டு வருகிறது என்றும்.

அதே வேளையில் 50 வயதிற்கு மேற்பட்ட சுமார் 80 ஆயிரம் ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வீட்டிற்கு அனுப்பும் பட்சத்தில். இந்த செலவினங்களை குறைத்து, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிகர வருவாயை உயர்த்த வழிவகுக்கும் படுகிறது.

அதனடிப்படையிலேயே ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாங்கள் எந்த ஊழியரையும விருப்ப ஓய்வு மனு கொடுக்கச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. நிறுவனத்தின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும்..! பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு என்று வகுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்களை எண்ணியும்..  

நிறுவனத்தின் ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு மனுக்களை கொடுத்து வருகின்றனர். இதுவரையில் சுமார் 77 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு மனு அளித்துள்ளனர். ஆனால் சில தொழிற்சங்கங்கள். வரும் நவம்பர் 25ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது வருந்தத்தக்க செய்தியாக உள்ளது.

போராட்டத்தை அறிவித்துள்ள மேற்கண்ட தொழிற்சங்கங்களுடன் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தான் இந்த சிறப்பு ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது போராட்டத்தை தூண்டுவது நிறுவனத்தின் வளர்ச்சி பாதைக்கு முட்டுக்கட்டையாக அமைகிறது என்று கூறுகிறது பிஎஸ்என்எல் நிர்வாகம்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதிநிதிகள் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில். பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ள விருப்ப ஓய்வு திட்டத்தில். பல்வேறு முரண்பாடான நடைமுறை சிக்கல்கள் உள்ளது எனவும். "குஜராத் மாடல் பென்ஷன் ஸ்கீம்" என ஊழியர்களிடம் கட்டாயமாக திணிக்கப்படுகிறது இந்த திட்டம் என்றும்.

இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தினை தேர்வு செய்யும் ஊழியர்கள். மத்திய அரசின் மூன்றாவது ஓய்வூதிய திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியாது. மேலும் விருப்ப ஓய்வுபெறும் ஊழியர் விபத்து அல்லது மரணமடைய நேரிட்டால் அவருடைய ஓய்வூதியம் அதோடு நின்று விடுகிறது. ஆனால் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் அந்த ஊழியர் இருந்தாலும் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் இறுதிவரை இவருடைய வருமானத்தின் பலனை அனுபவிக்க முடியும்.

இதுபோன்ற பல சிக்கல்கள் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை தங்கள் மீது திணிப்பதிகவும். நிறுவனத்தின் வளர்ச்சி பாதையில் எங்களுக்கும் அக்கறை உள்ளது என்றும். புதிதாக தொடங்க உள்ள 4ஜி சேவையின் மூலம் வரும் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்த்து., 

நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 25ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக இந்திய அளவில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று சேர அறிவித்துள்ளன..

சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்.கடந்த சில ஆண்டுகளாக பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்ற இந்த வேளையில். நிறுவனத்தினை சீரமைக்க ஆதரவு அளிக்க வேண்டிய மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாக அறிய முடிகிறது.

4 ஜி அலைக்கற்றை ஏலத்தில் கூட பிஎஸ்என்எல் நிர்வாகம் பங்கு பெற முடியாத அளவிற்கு பலதரப்பட்ட முட்டுக்கட்டைகளை போட்டது மத்திய அரசு. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் கோடி அசையா சொத்து மதிப்புடன் இயங்கிவரும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு. சுமார் 20 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே வங்கிகளில் கடன் இருந்தாலும். அந்தக் கடனை அடைப்பதற்கு சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்தாலே போதும்.! நிறுவனத்தின் கடனை அடைப்பதுடன் மட்டுமல்லாமல், அதன் வருமானத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை கொண்டு வரலாம். 

ஆனால் மாற்றாந்தாய் மனப்போக்குடன் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம். 

ஏர்டெல் வோடபோன் ஜியோ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன் தொகை சுமார் 1 லட்சம் கோடியை தாண்டுகிறது.இந்த நிறுவனங்களை ஒப்பிடுகையில், கடன் தொகையில் மிகமிகக் குறைவாக உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டி இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள வேலையிலும்.

பேச்சு வார்த்தையோடு மட்டுமே நின்றுவிடுகிறது அடுத்தகட்ட நடவடிக்கைகள். இந்நிலையில் நிகர வருமானத்தை இழந்துள்ள பிஎஸ்என்எல் நிர்வாகம். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகப்படியான செலவினங்களை வழங்குவதன் மூலம். வருமானமே இல்லாமல் திண்டாடி வருகிறது.

மத்திய அரசு இந்த நிறுவனத்தின் மீது தனி கவனம் செலுத்தாத பட்சத்தில். கடந்த சில ஆண்டுகளில் திவாலாகிப்போன ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனங்களின் வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணையம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

மணியன் கலியமூர்த்தி.