கள்ளக்காதலர்களை நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொலை செய்யும் சட்டம்! ஏப்ரல் 4 முதல் அமல்!

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் மற்றும் கள்ளக் காதல் செய்வோர், கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளில், புருனேயும் ஒன்றாகும். எண்ணெய் வளம் கொழிக்கும் இந்நாட்டை, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்கீழ், சுல்தான் பரம்பரையினர் ஆட்சி செய்து வருகின்றனர். தனது அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேஷியாவை விடவும், மிகக் கடுமையான, சட்ட திட்டங்களை, புருனே பின்பற்றி வருகிறது. 

முஸ்லீம் நாடான புருனேவில் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கையாளர்கள், கள்ளக் காதல்  கல்லெறிந்து கொல்லப்படுவார்கள்  என்ற புதிய உத்தரவை புருனே சுல்தான் வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்த உத்தரவு, அந்நாட்டில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. எனினும், இத்தகைய நடைமுறைகளை நிறுத்தும்படி, ஏற்கனவே, அம்னஸ்டி இன்டர்நேஷனல் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், இதையெல்லாம் ஏற்க, புருனே தயாராக இல்லை. சொன்னபடி, வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வரும் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இனி அந்நாட்டில் கள்ளக் காதலர்கள் சிக்கினால் நடு ரோட்டில் வைத்து கல்லெறிந்து கொன்றுவிடுவார்கள்.